Thursday, December 17, 2020

Whatsapp introduces new Storage Management Tool

 




Whatsapp introduces new Storage Management Tool : வாட்சப் தனது பயனர்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சேமிப்பிட மேலாண்மை கருவியை Storage Management Tool அறிமுகப்படுத்தியுள்ளது



வாட்சப்பின் இப் புதிய சேமிப்பக மேலாண்மை கருவியை திறக்கும்போது, ​​மேலே ஒரு புதிய (Bar) பட்டியைக் காண்பிக்கும். இது உங்கள் ஒவ்வொரு  வாட்சப் உரையாடல்களிலுமுள்ள மீடியா ஃபைல்களின் அளவுகளைக்  காண்பிக்கிறது.

இப்புதிய அப்டேட் குறைந்த சேமிப்பிடமுள்ள மொபைல் கருவிகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு வசதி.  மேலும் இந்த வசதி அனைத்து Android மற்றும் iOS பயனர்களுக்கும் தற்போது கிடைக்கிறது. ஒரு வேளை அதைக் காண்பிக்காவிட்டால் உங்கள் வாட்சப் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

இக்கருவியை  Settings> Storage and Data> Manage Storage ஊடாக அணுக முடியும்.

Whatsapp update

Google Crowdsource - நீங்களும் கூகுலிற்கு உதவலாம்?

  



Google Crowdsource : கூகுல் நிறுவனம் தனது குறிப்பிட்ட சில சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்  அதன் இயந்திர கற்றல் வழிமுறைகளை (Machine Learning Algorithms) பயனர் பின்னூட்டங்கள் (feedback) மூலம் பயிற்சியளிப்பதற்காக ஆரம்பித்திருக்கும் ஒரு செயற் திட்டம்தான் கூகுல் க்ரவுட் சோர்ஸ் Google Crowdsource. இத்திட்டம் 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

உதாராணமாக கூகுல் ட்ரான்ஸ்லேட்டர் (translator) பயன்படுத்தி ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கோ அல்லது தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கோ மொழி மாற்றம் செய்யும் போதும் மிகச் சரியான துல்லியமான வெளியீடு கிடைப்பதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது தமிழ் மொழியில் மட்டுமன்றி கூகுல் ஆதரவு வழங்கும் பல மொழிகளிலும் மொழி மாற்றும் செயற்பாடு இதே தரத்தில் தான் இருக்கிறது.



அதேபோல் படங்களை அடையாளமிடுதல் (image identification) போன்ற சில பணிகளில் கூகுல் பயன்படுத்தும் வழிமுறைகள் ”மனிதரைப்” போல் சிறந்த முடிவுளைத் தருவதில்லை.

ஒரு படத்திலிருக்கும் ’உருவம்என்ன என்பது உங்களுக்குத் தெரியாது என வைத்துக் கொள்வோம்.நீங்கள்  அதைப் பற்றி அறிய கூகுல் போட்டோஸ் செயலியிலுள்ள ’லென்ஸ்’ பயன் படுத்தித்   தேடுகிறீர்கள்.  கூகுள் உங்கள் தேடலுக்குப்  பொருத்தமற்ற படங்களையும் சேர்த்து பல படங்களை தேடல் முடிவுகளாக்க காண்பிக்கிறது.  அப்போது நீங்கள் ஒரு தவறான தகவலைப் பெறுவீர்கள். இவ்வாறு நடப்பதை யாரும் விரும்புவதில்லை.

இது போன்ற  சிக்கலைத் தீர்ப்பதற்காகப் பயனர்களின்"கூட்டு பங்களிப்பைப் " (collaborative contribution) பெற உருவாக்கப்பட்டிருப்பதே Google Crowdsource எனும் செயலி.


மேலும் AI (Artificial Intelligence -செயற்கை நுண்னறிவு)சார்ந்த மென்பொருட்கள் சிறப்பாக செயற்பட அதிகளவு தரவு தேவைப்படுகிறது. ஒரு AI நிரல் (programs) எவ்வளவு அதிகமான தரவைப் பெறுகிறதோஅப்போது அந்நிரலின் வெளியீடு மிகவும் துல்லியமாக இருக்கும். எனினும் மென்பொருள் உருவாக்குநர்கள் (developers) அத் தரவை வழங்குவது கடினமான பணியாக இருப்பதால்அவர்கள் பயனர்களிடமிருந்து தரவை எதிர்பார்க்கிறார்கள்.

க்ரவுட் சோர்ஸ் பல்வேறு வகையான பணிகளை உள்ளடக்கியதுமேலும் அவை ஒவ்வொன்றும் கூகுலின்இயந்திர கற்றல் வழிமுறைகளுக்கு பயிற்சித் தரவாக வழங்கக்கூடிய வெவ்வேறு தகவல்களை வழங்குகின்றன.

க்ரவுட் சோர்ஸ் திட்டத்தில் நீங்கள்பங்களிப்பாளராகச் சேரமுதலில் Google Crowdsource செயலியை மொபைலில் நிறுவ வேண்டும். செயலியை நிறுவியவுடன்நீங்கள் சரளமாக இருக்கும் மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் படிகேட்கிறது. பின்னர் நீங்கள் பங்களிக்கக்கூடிய கூகுல் கருவிகள் தொடர்பான ஆறு வெவ்வேறு பிரிவுகளைக்காட்டுகிறது.

நீங்கள் விரும்பும் பிரிவைத் தேர்ந்தெடுத்து அப்பிரிவு தொடர்பான பங்களிப்புகளைச் செய்ய முடியும்

  • Image Label Verification: படங்கள் சரியாக அடையாளமிடப்பட்டுள்ளதா எனப் பார்த்தல்
  • Image Capture: உங்கள் பிரதேச புகைப்படங்களை சேகரித்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
  • Translation: சொற்களையும்சொற்றொடர்களையும் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தல்
  • Translation Validation: சொற்கள்சொற்றொடர்கள் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்தல்
  • Handwriting Recognition கையெழுத்தைப் பார்த்து நீங்கள் பார்க்கும் உரையைத் தட்டச்சு செய்தல்.
  • Sentiment Evaluation: உங்கள் மொழியில் ஒரு வாக்கியம் நேர்மறையானதாஎதிர்மறையானதா அல்லது நடுநிலையானதா என்பதைத் தீர்மானித்தல்.
  • Landmarks படங்களில் உள்ள முக்கிய இடங்களைக் கண்டறிதல்
  • Smart Camera : ஒரு பொருளைச் சுட்டிக்காட்டிஅது என்ன என்பதை கேமராவால் யூகிக்க முடிகிறதா எனப் பார்த்தல்

 கூகுல் க்லவுட் சோர்ஸில் நீங்கள் வழங்கும் தகவல்களுக்குப் பிரதியுபகாரமாக கூகுல் உங்களுக்குப் “பணம்” தரும் என்றெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது. இது முற்றிலும் தன்னார்வ சேவை. கூகுல் மொழிமாற்றி -translator, லென்ஸ் -lens, ஜிபோர்டு Gboard, தேடல் - search போன்ற பயன்பாடுகளை மேம்படுத்துவதில் உதவியதற்காக உங்களுக்கு ஒரு மனத் திருப்தி அளிக்கும்.

இருந்தாலும் நீங்கள் வழங்கும் பங்களிப்புகளின்எண்ணிக்கையை கணக்கில் வைத்து அவற்றிற்கு கூகுல் புள்ளிகள் வழங்கும். அதிகமான பங்களிப்பு வழங்குபவர்களுக்கு அவ்வப்போது வெகுமதிகளையும்அனுப்பி வைக்கும். சில வேளை அவர்களின் சமூக நிகழ்வுகளுக்கு உங்களை அழைக்கவும் வாய்ப்பிருக்கிறது.

Google Crowdsource 

Thanks 😊 Mohamed Akmal


Android 108MP கேமராவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது Mi 10!!

 

சியோமியின் சமீபத்திய முதன்மை பிரீமியம் ஸ்மார்ட்போனான  Mi 10 இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது

சியோமியின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்மார்ட்போன் Mi 10 ஐ அறிமுகப்படுத்துவதாக கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. கோவிட் -19 தொற்றுநோயால் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்துவதற்கு தாமதமானது. தற்போது சில பகுதிகளில் லாக்டோவ்ன்  கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், சியோமி இறுதியாக இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.

தற்சமயம்  சாம்சங் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர்.முன்னதாக ஷியோமி இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  Mi  மற்றும் ரெட்மியை துணை பிராண்டுகளாக அறிவித்தது, தொலைபேசி சந்தையின் பிரீமியம் பிரிவில் அதிக கவனம் செலுத்தி வந்தது. அதன் விளைவாக இந்த ஸ்மார்ட்போன்  பிரீமியம் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

mi 10 1 1024x512 - 108MP  கேமராவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது  Mi 10!!

விவரக்குறிப்புகள்:

  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 865  பிராசஸர்
  • 6.67  இன்ச் 3D Curved E3 AMOLED full HD+ டிஸ்ப்ளே HDR 10+  சப்போர்ட்
  • 8 ஜிபி ரேம் மற்றும்128 ஜிபி வரை மெமரி/8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வரை மெமரி
  • MIUI 11
  • டூயல் சிம் ஸ்லாட்
  • பின்பக்க கேமரா : 108-megapixel பிரைமரி( (1/1.33-inch sensor, 7P lens, 1.6um, Super Pixel, OIS) + 2-megapixel  டெப்த் சென்சார் (f/2.4, 1.75um), + 2-megapixel மேக்ரோ சென்சார்  (f/2.4, 1.75um),+ 13-megapixel அல்ட்ரா வைடு சென்சார்(f/2.4, 1.12um, and 123-degree field of view).
  • இது 8 K  வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடன் புரோ-லெவல் வீடியோ ரெக்கார்டிங்கிற்கான மோட்களுடன்(modes)  வருகிறது.
mi 10 2 1024x512 - 108MP  கேமராவுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது  Mi 10!!
  • முன்பக்க கேமரா : 20-megapixel  செல்ஃபி கேமரா
  • USB Type-C port
  • ப்ளூடூத் v5.1, 5G
  • 4G LTE, வைஃபை 6 சப்போர்ட் மற்றும் யுஎஸ்எஃப் 3.0 ஸ்டோரேஜ்.
  • 4,780 எம்.ஏ.ஹெச். பேட்டரி,30W வேகமான சார்ஜிங் சப்போர்ட் (வயர்டு மற்றும் வயர்லஸ் ) ,ரிவர்ஸ்  வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட்  (10W) உடன் வருகிறது.
  • எடை :208 கிராம் 

Mi 10  – 8 ஜிபி/128 ஜிபி மாடலின் விலை ரூ .49,999. 8 ஜிபி/56 ஜிபி மாடலின் விலை ரூ .54,999. ஸ்மார்ட்போனை  முன்பதிவு செய்யும் 

வாடிக்கையாளர்களுக்காக சியோமி 30W வயர்லெஸ் சார்ஜரை தொகுக்கிறது. இவ்விரு மாடல்களும் Coral Green  மற்றும் Twilight Grey  நிறங்களில் வருகின்றன.

இந்த ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் அமேசான் மற்றும் மி.காம் வலைதளங்களில் தொடங்குகிறது.

Thanks 🙏 Mohamed Akmal

கூகுள் மொழிபெயர்ப்பின் புதிய டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் ..!!

 

கூகுள்  மொழிபெயர்ப்பு என்பது சிறந்த மொழிபெயர்ப்பு பயன்பாடுகளில் ஒன்றாகும். ஆப்பிளின் புதிய மொழிபெயர்ப்பு பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் கூட,கூகுள் சிறந்த மொழிபெயர்ப்பு பயன்பாடாக உள்ளது.இதிலுள்ள மிகச்சிறந்த அம்சங்களில் ஒன்று, இது நிகழ்நேரத்தில் உரையாடல்களை நடத்துவதற்கும் அவற்றை உங்கள் தொலைபேசியில் மொழிபெயர்ப்பதற்கும் உதவும்.

உங்கள் தொலைபேசியில் நிகழ்நேர மொழிபெயர்ப்புகளின் இந்த டிரான்ஸ்கிரிப்ட்களை சேமிக்க அனுமதிக்கும் என்று நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.  நீங்கள் உரையை எழுதும்போது திரையின் மேல் வலது மூலையில் ஒரு நட்சத்திர பொத்தானைக் காண்பீர்கள். இந்த பொத்தானைத் தட்டினால், உங்கள் தொலைபேசியில் டிரான்ஸ்கிரிப்டுகள் சேமிக்கப்படும். பக்கத்திலுள்ள sidebar இருந்து இவற்றை அணுகலாம்

கூகுளின் இந்த டிரான்ஸ்கிரிப்ட் அம்சம் இப்போது ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ், பிரஞ்சு, ஜெர்மன், தாய், இத்தாலியன், ரஷ்யன் மற்றும் போர்த்துகீசியம் என ஒன்பது மொழிகளில் செயல்படுகிறது.

XDA டெவலப்பர்களின் கூற்றுப்படி,  மே மாதத்தில் இந்த அம்சம்  டெவலப்-ன் கீழ் காணப்பட்டது. ஆனால் இது சேவையக பக்கம்  (server side ) இருப்பதால்,அனைவருக்கும் காண்பிக்கப்படாமல் போகலாம். உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பிளே ஸ்டோரில் கிடைக்கும் கூகுள் மொழிபெயர்ப்பிற்கான சமீபத்திய பதிப்பை  புதுப்பிதன் மூலம் உங்களுக்கு கிடைக்கலாம்.

நீங்கள் இந்த டிரான்ஸ்கிரிப்ட் அம்சத்தை பயன்படுத்துவீர்களா ? இது பயனுள்ள அம்சம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் கருத்துக்களை ஷேர் செய்யுங்கள்…..

Whatsapp introduces new Storage Management Tool

  Whatsapp introduces new Storage Management Tool : வாட்சப் தனது பயனர்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சேமிப்பிட மேலாண்மை கருவியை Storage ...