Monday, July 22, 2019

வட்ஸ்அப்பில் குறியீடு சொல்வதென்ன?

வட்ஸ்அப்பில் குறியீடு சொல்வதென்ன? 

உடனடி செய்தி பரிமாற்ற சமூக வலைத்தளமான வட்ஸ்அப்பில் நீங்கள் ஒரு செய்தி, படம், வீடியோ அல்லது ஏதேனும் ஒரு .ஆவணத்தை அனுப்பிய பின்னர் அந்த செய்தியின் கீழே வலது பக்க ஓரத்தில்  , PPP  என   ((tick mark)) குறியீட்டை அவதானித்திருப்பீர்கள். இந்த அடையாளங்கள் ஒவ்வொன்றும் மூன்று விடயங்களை உணர்த்துகின்றன.
  • சாம்பல் நிற (single grey check) P – உங்கள் செய்தி அனுப்பப்பட்டு விட்டது.
  • சாம்பல் நிற (double grey check) PP உங்கள் செய்தி உரியவரை அடைந்து விட்டது
  • நீல நிற (double blue check) PP உங்கள் செய்தி உரியவரால் படிக்கப்பட்டு விட்டது
நீங்கள் அனுப்பிய செய்தி எனக்குக் கிடைக்கவிலை, பார்க்கவில்லை என்றெல்லம் சொல்லி நண்பர் இனிமேல் உங்களை ஏமாற்ற முடியாது.

USB-Type C என்றால் என்ன?

இன்று USB (Universal Serial Bus)   கேபல் பற்றியோ USB போர்ட் பற்றியோ அறியாதோர் இல்லை எனுமளவுக்கு  USB கேபல் மற்றும் USB கருவிகளின்  பயன்பாடு தற்போது பரவலாகக் காணப்படுகிறது. விசைப்பலக, சுட்டி, ஸ்பீக்கர், ஸ்கேனர், அச்சுப்பொறி பென் ட்ரைவ், டிஜிட்டல் கேமரா, டேப்லட், ஸ்மாட் போன் என எந்தவொரு மின்னணு சாதனத்தையோ அல்லது கணினி துணைச் சாதனத்தையோ எடுத்தாலும் அவற்றில் USB இணைப்புக்களையோ (connector)  குதைகளையோ (Port) பார்க்க முடியும்
USB-C என்பது USB இணைப்பு வகைகளில் சமீபத்திய வரவாகும். இங்கு C ஆனது வகை C  (Type-C) என்பதைக் குறிக்கிறது. USB இணைப்பு (connector) வகைகளில் ஒன்றான USB Type-C கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த Type-C ஆனது USB நியமங்களில் USB 3.1 என்பதை ஆதரிக்கிறது. அதாவது USB-C இணைப்பு மூலம்  10 Gbps வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்ய முடியும். மேலும் USB-C இணைப்பின் மூலம் 20 volts அல்லது 100 watts அளவிலான மின் சக்தியையும் பரிமாற முடியும்.
USB-C ற்கு முந்திய இணைப்பு (connector)   வகைகளான USB Type-A மற்றும்  USB Type-B போலல்லாது  USB-C இணைப்பு சமச்சீரானது. அதாவது அதனை Type-C குதையில் பொருத்தும் போது கேபல் தவறான பக்கத்தில் உட்செலுத்தப்படுமோ என்று கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த Type-C இணைப்பை Type-C குதையில்  (ports) இரண்டு பக்கமும் உட்செலுத்த  முடியும்.
1996 இல் அறிமுகமான  USB இடைமுகப்புக்களில் USB-C ஆனது மிக முக்கியமான வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. USB 1.1, 2.0, 3.0 என அனைத்து USB நியமங்களும் ஒரே மாதிரியான தட்டையான , செவ்வக வடிவ  USB-A இனைப்பையே (connector)  பயன் படுத்தின. மேலும்  USB-B வகையில்  Mini-USB மற்றும் Micro-USB என  துணைச் சாதனங்களுக்கென வெவ்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்ட இணைப்புக்கள் வெளிவந்தாலும் அவ்வகை இணைப்புக் கொண்ட கேபலின் மறுமுனையானது Type-A குதையினுடன் பொருத்தக் கூடியதாய் இருந்தன. எனினும் தற்போது USB 3.1 நியமத்துடன் அறிமுகமாகியிருக்கும் Type-C இணைப்புக் கொண்ட கேபலின்  இரு முனைகளும்  ஒரே மாதிரியானதாவே இருக்கும்.
USB-B வகையில்  போன்று மினி (mini) மற்றும் மைக்ரோ (micro) பதிப்புகள் USB-C இணைப்பில் இல்லை. மேலும்  நியம முறையிலமைந்த  USB-C இணைப்பு மைக்ரோ USB இணைப்பு அளவிலேயே இருக்கிறது. அதாவது அதனை ஸ்மாட் போன், டேப்லட் போன்ற கையடக்கக் கருவிகளிலும் பயன் படுத்தலாம். USB-C இணைப்பு 100 watts அளவவிளான மின்சக்தியையும் ஆதரிப்பதால் மடிக்கணினிகளுக்கான  மின் சக்தியை வழங்கவும் பயன்படுத்த முடியும். Apple நிறுவனத்தின்  MacBook மற்றும் Google நிறுவனத்தின் Chromebook Pixel என்பன USB-C உடனான மின் இணைப்புடன் (Charger) கூடிய மடிக்கணினிகளாகும். . இம்மடிக் கணினிகளில் தனியாக  மின்சக்தி வழங்கக் கூடிய  இணைப்புக்கள் இல்லை.  பதிலாக மடிக்கணினிக்குரிய charger கேபலின் மறு முனை நேரடியாக USB-C குதையுடனேயே இணைக்கப்படுகிறது.
USB-C இணைப்பை (connector)   USB-C குதையில் (port) இல் மட்டுமே பொருத்த முடியும். எனினும் USB-C இணைப்புடன் கூடிய கேபல் இதற்கு முந்திய இணைப்பு வகைகளான USB-B,  USB-A  என்பவற்றையும் ஆதரிக்கும். இதனை பின் நோக்கிய பொருத்தப்பாடு (backwards-compatiblity) என அழைக்கப்படுகிறது. USB-C to USB-A,  USB-C to USB-B வகையிலான விசேட கேபல்கள் அவசியம். ஒரு  USB-C to USB-A மற்றும்  USB-C to USB-B இணைப்புக்கள் கொண்ட கேபல்கள் மூலம் USB-C வசதியில்லாத பழைய சாதனங்களையும் USB-C குதையுடன் இணைக்க முடியும். எனினும் தரவுப் பரிமாற்ற வேகம் மற்றும் மின் சக்தியின் அளவு என்பன முந்திய நியமங்களை ஒத்ததாக இருக்கும்

How to shut down PC’s in a network

வலையமப்பில் இணைந்துள்ள கணினிகளை 
ஒரே இடத்திலிருந்து சட்டவுன் செய்ய….

ஒரு கணினி வலையமைப்பில் இணைந்துள்ள கணினிகளை மற்றுமொரு கணினியிலிருந்து சட்டவுன் செய்யும் வசதி விண்டோஸ் எக்ஸ்பீயில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைக் கொண்டு சட்டவுன் செய்வது மட்டுமல்லாமல் ரீஸ்டார்ட் மற்றும் லொக்-ஓப் செய்யவும் முடியும்., இந்த வசதி ஒரு வலையமப்பு மேலாளராகப் பணிபுரிவோருக்கு மிகவும் உபயோகமானது. ஒரு உள்ளக கணினி வலையமைப்பில் இணைந்துள்ள கணினிகள் ஒவ்வொன்றாக சட்டவுன் செய்வது சலிப்பை உண்டாக்கும் விடயமாதலால், இருந்த இடத்திலிருந்தே ஏனைய கணினிகளின் இயக்கததை இந்த வசதி மூலம் நிறுத்தி விடலாம். அதற்கு நீங்கள்ப் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள்.
முதலில் கணினி அட்மினிஸ்ட்ரேட்டராக லொக் இன் செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஸ்டார்ட் பட்டனில் க்ளிக் செய்து ரன் தெரிவு செய்யுங்கள். அங்கு தோன்றும் ரன் பொக்ஸில் shutdown –I என டைப் செய்து ஓகே க்ளிக் செய்ய Remote Shutdown Dialogbox தோன்றும்.
அங்கு Add பட்டனில் க்ளிக் செய்து நீங்கள் சட்டவுன் செய்யவிருக்கும் கணினியின் பெயரை அல்லது ஐபி முகவரியை டைப் செய்து சேர்த்து விடுங்கள். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளையும் இவ்வாறு சேர்க்கலாம். அடுத்து “What do you want these computers to do எனுமிடத்தில் விரும்பும் செயற்பாட்டையும் (log off, restart, shutdown) தெரிவு செய்து விடுங்கள். இந்த செயற்பாடு பற்றி அந்தக் கணினியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பயனருக்கு அறிவிப்பதற்கு “Warn users of the action” என்பதைத் தெரிவு செய்து ஒரு நேர இடை வெளியையும் குறிப்பிடலாம். அடுத்து ஓகே பட்டனில் க்ளிக் செய்ய அந்தக் கணினி நீங்கள் தெரிவு செய்த செயற்பாட்டை நிறைவேற்றும்.

How to connect two PC’s?

இரண்டு கணினிகளை இணைப்பது எப்படி?

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றோடொன்று இணைக்கப் பட்டிருப்பின் அதனை ஒரு கணினி வலையமைப்பு (Computer Network) எனப்படும். கணினிகளை ஒன்றோடொன்று இணைப்பதிலும் பல்வேறு முறைகள் பயன் பாட்டிலுள்ளன. வலையமைப்பின் அளவைப் பொருத்து இந்த ஒவ்வொரு முறையும் அதற்கேயுரிய சாதக பாதகங்களையும் கொண்டுள்ளன.
எந்த வகையிலான கணினி வலையமைப்பை உருவாக்கும் போதும் சில அடிப்படை விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது, உதாரணமாக வலையமைப்பு உருவாக்கப் போவது கம்பியூடா (wired) அல்லது கம்பியில்லாமலா (wireless) என்பது.
அதேபோன்று ஒரு வலையமைப்பில் முக்கிய பங்காற்றுவது ப்ரொட்டகோல் (Protocol) எனப்படும் தொடர்பாடல் விதி முறைகளாகும். இருவேறு பட்ட கணினிகள் தொடர்பாடும் போது இணைப்பு மொழியாக இந்த ப்ரொட்டகோல் தொழிற்படுகிறது. தற்போது கணினி வலையமைப்பில் TCP/IP எனும் தொடர்பாடல் விதிமுறையே பயன் பாட்டிலுள்ள்து.. இந்த விதி முறையே உலகலாவிய கணினி வலையமைப்பான இணையத்திலும் பயன் படுத்தப்படுகிறது.
பைல் மற்றும் வளங்களைப் பாரிமாறிக் கொள்ளும் வசதி, மின்னஞ்சல், கணினி வழி உரையாடல், பேஸ் புக் போன்ற சோஷியல் நெட் வொர்க் (Social Networking) சேவைகள் போன்றன் இன்றைய கணினிகளால் இணைந்து விட்ட உலகின் வியக்கத் தக்க பயன்பாடுகளாகப் பேசப்படுகிறது. உலகம் முழுதும் பரவியுள்ள கணினிகளின் வலையமைப்பே இதனைச் சாத்தியமாக்கியது.
இனி விடயத்திற்கு வருவோம். வீட்டிலோ அலுவலகத்திலோ கணினிகளை ஓர் அறையின் மூலையில் வெளியுலக் தொடர்பேதுமில்லால் (Stand alone) தனியாக வைத்துப் பாவிக்கும் காலம் எப்போதோ மலையேறி விட்டது இருப்பது இரண்டே இரண்டு கணினிகளாயினும் அவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் பயன் படுத்துவதில் பல அனுகூலங்கள் உள்ளன. இரண்டு கணினிகளை இணைத்து ஒரு சிறிய கணினி வலயமைப்பை உருவாக்க ஒன்றுக்கு மேற்பட்ட வழி முறைகளும் உள்ளன. அவற்றுள் அதிக செலவில்லாமல் இணைக்கக் கூடியது க்ரொஸ் ஒவர் (cross-over) கேபல் கொண்டு இணைப்பதாகும். அதன் மூலம் இரண்டு கணினிகளுக்கிடையே பைல்களைப் பரிமாறிக் கொள்ளவும் இணைய இணைப்பு மற்றும் ப்ரிண்டர்களை பகிர்ந்து கொள்ளவும் முடியும்..
இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்வதாயின் ஒரு கணினியில் இரண்டு நெட்வர்க் கார்டுகளை (Network Interface Card) பொருத்த வேண்டி யிருக்கும். ஒரு கார்டை ப்ரோட்பேண்ட் (Broadband) இணைப்புக்கான ரூட்டரிலும் (Router) மற்றொரு கார்ட் அடுத்த கணினியை இணைக்கவும் பயன் படுத்தப்படும்.
ப்ரோட்பேண்ட் இணைய இணைப்பைப் பகிர வேண்டிய அவசியமில்லை அல்லது நீங்கள் பயன் படுத்துவது டயல் அப் (Dial up) இணைப்பு எனின் ஒரு கணீனியில் இரண்டு நெட்வர்க் கார்டுகள் தேவைப் படாது.. இரண்டு கணினிகளை இணைப்பது பைல்களைப் பரிமாற மட்டுமே எனின் இரண்டு கணினிகளிலும் ஒவ்வொரு நெட்வர்க் கார்ட் இருந்தாலே போதுமானது.
எனினும் இவ்வாறு இரண்டு கணினிகளை இணைக்கும் போது சில வரையறைகளும் உள்ளன என்பதைக் கவனத்திற் கொள்ள் வேண்டும். உதாரணமாக இணைய இணைப்பையோ அல்லது ப்ரிண்டரையோ பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு கணிகளும் இயக்க நிலையிலேயே இருக்க வேண்டும் என்பதையும் மறந்து விடாதீர்கள்,.
இடையில் ஹப் (Hub) , ஸ்விச் (Switch) போன்ற வேறு எந்த சாதனங்களும் இல்லாமல் நெட்வர்க் கார்ட் ஊடாக மட்டுமே இணைப்பதற்கு இரண்டு கணினிகளையும் விசேட cross-over கேபல் பயன் படுத்தப்படுகிறது.. இந்த க்ரொஸ் ஓவர் கேபல் வழமையான (Ethernet) ஈதர்நெட் கேபலிலிருந்து வேறுபட்டது. இதனை நாமாகவே த்யாரித்துக் கொள்ளவும் முடியும்.
இரண்டு கணினிகளையும் கேபல் கொண்டு இணைத்து விட்டால் மாத்திரம் அவற்றிற்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள முடியாது. அடுத்த வேலையாக இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரிகளை கீழுள்ளவாறு மாற்றியமைக்க வேண்டும்.
விண்டோஸ் எக்ஸ்பீ இயங்கு தளத்தில் முதல் கணினியில் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்யுங்கள். அப்போது திறக்கும் விண்டோவில் Local Area Network என்பதன் கீழ் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனை மஞ்சள் நிறத்தில் விழிப்புக் குறியுடனும் “Limited or No Connectivity” எனும் செய்தியுடனும் காண்பிக்கும். அதாவது கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற் கொள்ள இரண்டு கணினிகளும் இன்னும் தயாராயில்லை என்பதையே இது காட்டுகிறது
அடுத்து அந்த ஐக்கன் மீது ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவிலிருந்து Properties தெரிவு செய்யுங்கள்., அப்போது தோன்றும் Local Area Connection Properties டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Internet Protocol (TCP/IP) என்பதைத் தெரிவு செய்து அதன் கீழுள்ள் Properties பட்டனில் க்ளிக் செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் Use the following IP address என்பதைத் தெரிவு செய்து கீழுள்ள்வாறு அதன் ஐபி முகவரியை மற்றியமையுங்கள்..
முதல் கணினியில் (PC-1) ஐபி முகவரியாக 192.168.0.1 எனவும் இரண்டாவது கணினியில் (PC-2) 192.168.0.2 எனவும் வழங்குங்கள். இப்போது இரண்டு கணினிகளையும் இணைத்தாயிற்று, இதனை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் மறு படியும் Start → Settings ஊடாக Network Connections தெரிவு செய்ய் வரும் விண்டோவில் நெட்வர்க் கார்டுக்குரிய ஐக்கனில் ம்ஞ்சல் நிற விழிப்புக் குறி மறைந்திருப்பதைக் காணலாம். சில வேளை அந்த ஐக்கன் மேல் பூட்டு வடிவில் ஒரு ஐக்கன் இருப்பதை அவதானித்தால் Firewall இயக்க நிலையிலுள்ளது என்பதையே காட்டுகிறது. அவ்வாறிருந்தால் பைல் பரிமாறம் செய்வதை விண்டொஸ் அனுமதிக்காது. அதனை இடப்பக்கம் Network Task என்பதன் கீழ் Change Windows Firewall Settings என்பதைக் க்ளிக், செய்து தற்காலிகமாக நிறுத்திக் கொள்ளுங்கள்.. தற்போது இந்த சிறிய வலையமைப்பில் பைல், போல்டர் மற்றும் வளங்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாயிருக்கும்.
IP Address: 192.168.0.1
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
இரண்டாவது கணினியிலும் கீழே காட்டியுள்ளது போன்று ஐபி முகவரியை மாற்றி அமையுங்கள்.
IP Address: 192.168.0.2
Subnet Mask: 255.255.255.0
Default Gateway: 192.168.0.1
Preferred DNS Server: 192.168.0.1
அதி வேக ப்ரோடபேண்ட் இணைய இணைப்பைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் இரண்டு கணினிகளிலும் ஐபி முகவரியை மாற்றியமைக்கும் இடத்தில் “Obtain an IP address automatically” என்பதைத் தெரிவு செய்ய் வேண்டும்.
எனினும் அதிவேக இணைய இணைப்பை இரண்டு கணினிகளுக்கிடையே பகிர்ந்து கொள்ள வேண்டுமாயின் நேரடியாக க்ரொஸ் ஓவர் கேபல் கொண்டு இணைப்பதை விட இடையில் இரண்டு அல்லது நான்கு போர்டுகள் (Ports) கொண்ட ரூட்டர் மூலம் இணைப்பதே சிறந்த வழி முறையாகும். எனினும் அதற்கு க்ரொஸ் ஓவர் கேபலை விட செலவு சற்று அதிகமாயிருக்கும். .என்பதை நினைவில் கொள்ளவும்.

What is Cross-Over Cable?

Cross-Over Cable  என்றால் என்ன?
 
இரண்டு கணினிகளை நேரடியாக இணைப்பதற்குக் க்ரொஸ்–ஓவர் கேபல் (cross-over)  பயன்படுகிறது.
கணினி வலயமைப்பை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் சாதாரண முறுக்கிய கம்பிகளைக் (Twisted pair) கொண்ட கேபலானது எட்டு வயர்களை உள்ளே கொண்டிருக்கும்.. இந்த எட்டு வயர்களும் நான்கு சோடிகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றின் இரு முனைகளும் pin-to-pin முறையில் (Connector) கனெக்டரில் இணைக்கப்படும். அதாவது கேபலில் உள்ள வயர்களின் நிலைகள் இரண்டு முனைகளிலும் ஒத்திருக்கும்.
100 Mbps வேகம் கொண்ட Fast Ethernet நெட்வர்க் கார்டில் ஒரு சோடி வயரானது டேட்டாவை அனுப்புவதற்கும் (transmit) மற்றொரு சோடி வயர் டேட்டாவைப் பெற்றுக் கொள்வதற்கும் (receive) பயன்படுத்தப்படும். அதே வேளை மீதமிருக்கும் இரண்டு சோடி வயர்களும் பயன்படுத்தப் படாமலிருக்கும்.
இரு கணினிகளை இணைக்கும்போது pin-to-pin முறையில் வயர்களைக் அதற்குரிய கனெக்டரில் இணணக்கப்படின் அது செயற்படாது. ஏனெனில் இந்த முறையில் டேட்டாவை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு சோடி வயரானது அதன் அடுத்த முனையிலும் அதே போன்று டேட்டாவை அனுப்புவதற்கான சோடியுடனேயே இணைக்கப்படும். அதே போன்று டேட்டாவை பெற்றுக் கொள்ளும் ஒரு சோடி வயரானாது அடுத்த முனையிலும் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் சோடியுடனேயே இணைக்கப் படும். இதனையே பின்-டு-பின் கேபல் எனப்படும். இதன் காரணமாகா இரண்டு கணினிளும் ஒன்றோடொன்று தொடர்பாடலை மேற் கொள்வது சாத்தியப்படாது. .
பின்-டு-பின் கேபலை பயன்படுத்தி இரண்டு கணினிகளைக் இணைக்க வேண்டுமானால் இடையில் ஹப் (hub) அல்லது ஸ்விட்ச் (switch) போன்ற சாதனங்கள் தேவைப்படும். இந்த ஹப் அல்லது ஸ்விச், ஆனது இரண்டு வயர் சோடிகளையும் எதிரெதிர் முனைகளில் (cross) சந்திக்க வைக்கிறது. அதாவ்து ஒரு கணினியில் டேட்டாவை அனுப்புவதற்குப் பயன்படும் ஒரு சோடி வயரானாது அடுத்த கணினியில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையுடனும் டேட்டாவைப் பெற்றும் கொள்ளும் முனையானது அடுத்த கணினியில் டேட்டாவை அனுப்பும் வயர் சோடியின் முனையுடனும் தொடுக்கப்படும். இதன் மூலம் இரு கணினிகளுக்கிடையே தொடர்பாடலை மேற்கொள்ள முடியும்.
க்ரொஸ்-ஓவர் கேபல் இதற்கு நேர் மாற்றமானது. இங்கு டேட்டாவை அனுப்புவதத்குப் பயன்படும் ஒரு சோடி வயரானாது அடுத்த முனையில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையுடன் இணைக்கப்படும். அதே போன்றே அடுத்த சோடி வயரில் டேட்டாவைப் பெற்றுக் கொள்ளும் முனையானது டேட்டாவை அனுப்பும் வயரின் முனையுடன் கனெக்டரில் இணைக்கப்படும்.
க்ரொஸ்-ஒவர் கேபல் சாதராண நெட்வர்கின் கேபலிலிருந்து வேறுபடுவது அதிலுள்ள வயர்களினாலோ அல்லது அவற்றில் இனைக்கப்படும் கனெக்டரினாலோ அல்ல. அந்த வயர்களை ஒன்றோடொன்று இணைக்கப்படும் விதத்திலேயே அது மாறுபடுகிறது,

What is Wi-Fi?

கணினி மற்றும் கணினி சார்ந்த உபகரணங்களிடையிலான கம்பியில்லாத் தொடர்பாடலைக் குறிக்கும் ஒரு சொல்லே (Wi-Fi) வைபை. இந்த Wi-Fi எனும் வார்த்தை Wireless Fidelity எனும் இரு வார்த்தைகளிலிருந்து உருவானது. வைபை இணைப்பில் கம்பிகளுக்குப் பதிலாக வழமையான ரேடியோ அலைகளே டேட்டாவை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் பயன் படுத்தப்படுகிறது.
கம்பி மூலம் இணைக்கப்பட்ட உள்ளக வலயமைப்பை LAN என்பது போல் கம்பியில்லா இந்த உள்ளக வலையமைப்பை WLAN (Wireless Local Area Network) எனப்படுகிறது.
 
நீங்கள் அதி வேக இணைய இணைப்பைப் பெறுவதற்கு கம்பியில்லா ரவுட்டர் (Router) சாதனம் பயன்படுத்துவதாயிருந்தால் நீங்களும் வைபை பயன் படுத்துகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
 
செல்போன், தொலைக் காட்சி, வானொலி போன்று இந்த கம்பியில்லா வைபை தொழில் நுட்பத்தில் ரேடியோ அலைகள் பயன் படுத்தப்படுகின்றன.. இதற்கு 2.4GHz அலை வரிசை பயன் படுத்தப்படுகிறது. எனினும் வனொலி, தொலைக் காட்சி போலன்றி இந்த வயர்லெஸ் நெட்வர்கில் (Wireless Network) இரு வழித் தொடர்பாடலே நடைபெறுகிறது. இதனை Full-Duplex எனப்படும்.
 
1998 ஆம் அண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட வைபை தொழில் நுட்பமானது இன்று வரை பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி வந்துள்ளது. தற்போதைய வைபை தொழில் நுட்பத்தில் 300 முதல் 600 அடிகள் அல்லது அதனையும் தாண்டி டேட்டா கம்பியின்றிப் பயணிக்கிறது.
 
வயரில்லாமல் எங்கிருந்தும் இணையத்தை அணுகக் கூடிய வசதியே வைபை வலையமைப்பின் பிரதான பயனாகக் கருதப்படுகிறது. தற்போது மடிக்கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற இடத்துக்கிடம் எடுத்துச் செல்லத்தக்க பல இலத்திரனியல் சாதனங்கள் வைபை வசதியுடன் வெளி வருகின்றன. அதன் மூலம் வைபை ரூட்டர் பயன் படுத்தப்படும் குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் எங்கிருந்தும் வயரில்லாமலேயே இணையத்தை அணுக முடியும்.
ஒரு வைபை ரூட்டருடன் இணைப்பை ஏற்படுத்த வேண்டுமானால் ஒரு கணினியில் வைபை சிக்னலை அனுப்ப மற்றும் பெறக்கூடிய வைபை அடெப்டர் (Wireless Adapter) எனும் சாதனம் பொருத்தப்படல் வேண்டும். தற்போது வெளிவரும் மடிக் கணினிகள் வைபை அடெப்டர் கார்டுடன் தயாரிக்கப்படுகின்றன. உங்கள் கணினியில் வைபை வசதி இல்லையெனில் யூ.எஸ்.பி போர்டில் பொருத்தக் கூடிய வைபை அடெப்டரை வாங்கிப் பொருத்தலாம்.,
கணினியிலுள்ள வயர்லெஸ் அடெப்டரானது டேட்டாவை ரேடியோ சிக்னலாக மாற்றி எண்டெனா மூலம் அனுப்புகிறது. இந்த சிக்னலைப் பெற்றுக் கொள்ளும் வயர்லெஸ் ரூட்டரானது அதை டீகோட் (decode) செய்து மறுபடியும் இணையத்துடன் வயர்மூலம் தொடர்பு கொள்கிறது. இதே செயற்பாடு மறுதலையாகவும் நடை பெறுகிறது. அதாவது இணையத்திலிருந்து பெறும் தகவலை ரூட்டரானது ரேடியோ சிக்னலாக மாற்றி கணினியிலுள்ள வயர்லெஸ் அடெப்டரை நோக்கி அனுப்புகிறது.
வைபை சிக்னல் கிடைக்கப்பெறும் இடங்களை வைபை hotspotஎனப்படும். இந்த வைபை ஹொட்ஸ்பொட்டிலிருந்து இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தியோ இணையத்தில் இணைந்து கொள்ளலாம். ஒரு ஹொட் ஸ்பொட்டில் இருந்து இணைய சேவையைப் பெறுவதற்கு கணினியில் வயர்லெஸ் எடப்டரைப் பொருத்தியிருக்க வேண்டும். அதன் மூலம் வர்யர்லெஸ் இணைய சேவை உள்ள இடங்கள் கண்டறியப்படுகிறது.
பொது மக்கள் பாவனைக்கென வழங்கப்படும் வைபை ஹொட் ஸ்பொட் டுகளை கட்டணமின்றி அணுக முடியும். கட்டணம் செலுத்தி அணுககக் கூடிய ஹொட் ஸ்பாட்டுகள் பாஸ்வர்ட் கொண்டு பாதுகாக்கப்பட்டிருக்கும்.
 
ஒரே நேரத்தில் பல பேர் இந்த வைபை இணைப்பைப் பயன்படுத்தி இணைய சேவையைப் பெறலாம். எனினும் அதிக அளவிளான இணைப்புகள் ஏற்படுத்தப்படும்போது டேட்டா பயணிப்பதில் குறுக்கீடுகளும் வேகத்தில் மந்த நிலையையும் உணரப்பபட வாய்ப்புள்ளது.
கம்பியில்லா கணினி வலயமைப்பைக் குறிக்கும் வைபை தொடர்பாடலிலும் பல விதிமுறைகள் உள்ளன. இவற்றுள் 802.11 என்பது Institute of Electrical and Electronics Engineers (IEEE) எனும் நிறுவனத்தினரால் நிர்ணயிக்கப்பட்ட ஒரு விதி முறையாகும். இந்த விதிமுறைகள் 802.11a, 802.11b, 802.11g, 802.11n என பல வளர்ச்சிப் படிகளைத் தாண்டி வந்துள்ள்ன. 802.11n (வயலெஸ் என்) என்பது 2009 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் வரையறுக்கப்பட்டதாகும்.
 
இந்த Wireless  n  – ஆனது 2.4GHz அல்லது 5 GHz அலை வரிசையில் டேட்டாவைக் கடத்துகிறது. இது இதற்கு முந்திய விதிமுறைகளை விட அதிக வேகமாகவும். அதிக தூரம்செல்லத்தக்கதாகவும். உருவாக்கப்பட்டுள்ளது.
கம்பியில்லா வலையமைப்பை இப்போது பலரும் பரவலாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். வீடுகளில் மட்டுமன்றி நூல் நிலையங்கள், .பல்கலைக் கழகங்கள், விமான நிலையங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள் போன்ற பல இடங்களில் இந்த கம்பியில்லாத் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது.
 
வைபை தொழில் நுட்பத்தின் மூலம் மூலம் இலகுவாக இணையத்தில் இணையும் வசதி கிடைத்தாலும் உரிய பாதுகாப்பு இல்லையெனின் அதன் அருகாமையில் உள்ள எவரும் இந்த வலயமைப்பில் இணைந்து கொள்ளலாம் என்பதை ஒரு பாதகமான விடயமாகக் கருதலாம்.
 
வைபை தொழில் நுட்பமானது தொடர்பாடலில் பெரிய அளவிலான பங்கை வகிக்க ஆரம்பித்துள்ளதுடன் உலகெங்கும் உள்ளக கணினி வலையமைப்பு களில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
-அனூப்-

மடிக்கணினியை Wi-Fi Hotspot ஆக மாற்றும் Virtual Router



மடிக்கணினியில் நீங்கள் பயன் படுத்தும் வயர் மூலமாகவோ (wired)  அல்லது வயறின்றியோ (wireless) பெறும் இணைய இணைப்பை உங்களிடமுள்ள ஏனைய கருவிகளுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய வசதியைத் தருகிறது Virtual Router  எனும் திறந்த மூல மென்பொருள் கருவி. இம்மென்பொருள் விண்டோஸ் இயங்கு தளத்தின் அண்மைக் கால பதிப்புக்கள் அனைத்தையும் ஆதரிக்கிறது Virtual Router மென்பொருளை https://virtualrouter.codeplex.com/ எனும் இணைய தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்யலாம்.
இம்மென்பொருளை நிறுவிய பின்னர் அதனைத் திறந்ததும் வரும் விண்டோவில் Network Name எனும் பகுதியில் விரும்பிய பெயரை வழங்க முடியும்.. அதே போல் பாஸ்வர்டாகவும் விரும்பிய சொற்களை வழங்கலாம். எனினும் இங்கு பாஸ்வர்ட் 8 எழுத்துக்கள் கொண்டதாய் இருத்தல் அவசியம். அடுத்து  Shared connections எனும் இடத்தில் நீங்கள் தற்போது உபயோகிக்கும் இணைய இணைப்பு பெறும் வழியை தெரிவு செய்து  Start Virtual Router பட்டனில் க்ளிக் செய்ய வேண்டும்.
இபோது உங்கள் மடிக்கணினி  wifi hotspot ஆக மாற்றப்பட்டு விடும். இந்த ஹொட் ஸ்பாட்டில் உங்களிடமுள்ள பிற கருவிகளை இணைத்து அக்கருவிகளிலும் இணையத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

Google Maps செயலியில் உங்கள் வீட்டை, வியாபார நிலையத்தை அடையாளமிடுவது எப்படி?

கூகுல் மேப்ஸ் தளத்தில், வியாபார நிறுவனங்கள், பாடசாலைகள், மதஸ்தளங்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், வீடுகள் என ஏராளமான இடங்கள் பெயர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கிறீர்கள்.  இந்தப் பெயர்கள் எதுவும் கூகுல் நிறுவனம் அடையாளமிடுவதில்லை. எங்களைப் போன்ற சாதாரண கூகுல் மேப்ஸ் பயனர்களே அதனை அடையாளமிடுகிறார்கள்.
இந்த அடையாளமிடும்  வேலைக்கு  கணினி,  மொபைல் என இரண்டு சாதனங்களையும் பயன் படுத்தலாம்.   ஆனால் மொபைல் ஃபோன் மூலமாக இலகுவாக அடையாளமிட முடியும்.  இங்கு அண்ட்ராயிட் மொபைல் மூலம் எவ்வாறு  ஓர் வியாபார நிலையத்தை அடையாளமிடுவது என்பது  பற்றி விவரிக்கப்படுகிறது.
  
  • முதலில் Google Maps செயலியைத் திறந்து கொள்ளுங்கள.
  • அங்கு மேற் பகுதியில் தோன்றும் தேடற் பெட்டியில் நீங்கள் சேர்க்க விரும்பும்  இடம் அமைந்துள்ள பிரதேசத்தின் பெயரை டைப் செய்து தேடுங்கள்.
  • அப்போது அந்தப் பிரதேசத்தை கூகுல் மேப்பில் காண்பிக்கும்.இந்த செயற்பாட்டுக்கு கூகுல் மேப்பின் செய்மதி  தோற்றமே (Satellite View) மிகவும் பொருத்தம் என்பதால்   சேட்டலைட் காட்சிக்கு மாறிக் கொள்ளுங்கள். மேலும் நீங்கள் அடையாளமிட விரும்பும் இடத்தினை மேப்பில்  போதியளவு  ஷூம் (zoom) செய்து பெரிதாக்கிக் கொள்ளுங்கள்.
  • உங்கள் இடத்தினை மேப்பில் காணக் கூடியாதாக இருந்தால் அந்த இடத்தில் விரலால் ஒரு நீண்ட அழுத்தத்தைப் பிரயோகியுங்கள்.
  • அப்போது  நீங்கள் குறிப்பிடும் இடத்தில் ஒரு சிவப்பு நிற பலூன் குறியீடு தோன்றும் . அதாவது உங்கள் இடம் இங்கு  பின் செய்யப்படும்.
  • அடுத்து மேப்பின் மேலே மூன்று கோடுகளால் காண்பிக்கப்படும் மெனு பட்டனில் தட்டுங்கள்.

  • தோன்றும்  மெனுவிலிருந்து  Add a missing place என்பதைத் தெரிவு செய்யுங்கள்.
  • அப்போது தோன்றும் பெட்டியில் அந்த இடம் பற்றிய மேலதிக விவரங்களை வழங்க வேண்டும்.Name, Address   எனும் பகுதிகளில்  நீங்கள் அடையாளமிட விரும்பும் இடத்தின் பெயரை யும்  முகவரியையும்  வழங்குங்கள்.
  • அடுத்து Mark location on map எனும் பெட்டியில் விரலால் தட்ட மறுபட்டி மேப்பைக் காண்பிக்கும்.  அங்கு சிவப்பு நிறத்தில் தோன்றும் Pin  ஐ சரியாக உங்கள் இடத்தின் மீது வரும் படி மேப்பை நகர்த்தி  OK செய்யுங்கள்.
  • அடுத்து கீழேள்ள Category பகுதியில் தட்டி  செய்து நீங்கள் அடையாளமிடும் இடம் என்ன வகையில் அடங்கும் என்பதை தரப்பட்டுளள பட்டியலிலிருந்து தெரிவு செய்து விட்டு மேலேயுள்ள அம்புக்குறி வடிவ பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.
  • வியாபார நிலையம் திறந்திருக்கும் நாட்கள் மற்றும் நேரங்களை  அடுத்தடுத்த நிலைகளில் வழங்க வேண்டும்.
  • இறுதியாக ஒரு செய்திப் பெட்டி தோன்றும். அங்கு  Submit Anyway  என்பதை தட்டி விடுங்கள்.
 
எனினும் நீங்கள் அடையாளமிடும் இடங்கள் உடனடியாக மேப்பில் கண்பிக்கப்படமாட்டாது.  அந்த இடத்தினை ஆய்வு  செய்து  ஒரு சில மணித்தியாலங்களில் பின்னர்  மேப்பில் சேர்த்து விட்டதாக மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால் அடையாளமிடப்பட்ட அந்த இடத்தினை உங்களுக்கு மட்டுமே காண்பிக்கும்.
கூகுல் மேப் ஆய்வு செய்வோர் பலருக்கு  (map reviewers) அதனை அனுப்பி அந்த இடத்தின் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்திய பிறகே பொதுவாக  எல்லோரும் பார்க்கும் படியாக கூகுல் மேப்பில் காண்பிக்கப்படும். . இந்த செயற்பாட்டுக்கு ஓரிரு மாதங்கள் செல்லலாம்.
-அனூப்-

https://youtu.be/9m_K2Yg7wGQ

https://youtu.be/9m_K2Yg7wGQ

IMEI Number என்றால் என்ன?

IMEI Number என்றால் என்ன?

நீங்கள் பயன்படுத்தும் எந்தவகை மொபைல் ஃபோனும் IMEI (’இமி’ நம்பர் என்ற சொற் பிரயோகத்தை நீங்கள்கேட்டிருக்கலாம்) எனும் ஓர் இலக்கத்தைக் கொண்டிருக்கிறது. IMEI என்பது International Mobile Equipment Identity (சர்வதேச மொபைல் சாதனஅடையாள எண்) என்பதன்சுருக்கமே. ஒரு செல்லுலார் நெட்வொர்க்குடன் இணையும் ஒவ்வொரு மொபைல் சாதனமும் ஒரு தனித்துவமான IMEI எண்ணைக்கொண்டிருக்கும். இதில் சாதாரண செல்போன்கள், ஸ்மார்ட் போன்கள், செல்லுலார்-வசதிகொண்ட டேப்லட் கணினிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் செல்லுலார் டேட்டாவை ஆதரிக்கும் அனைத்து சாதனங்களும் அடங்கும்.
IMEI இலக்கம்ஒரு மொபைல் சாதனத்தை தனியாக அடையாளப்படுத்துகிறது. இந்த இலக்கம் சிம் அட்டையில் காணப்படும் இலக்கத்திலிருந்து வேறுபட்ட்து.  சிம் அட்டையானது நிரந்தரமானதல்ல. இது சாதனத்தில் இருந்து நீக்கக்கூடியது என்பதைநீங்கள் அறிவீர்கள்.
IMEI இலக்கமானதுஒரு குறிப்பிட்ட மொபைல் சாதனத்தைக் கண்காணிக்க அல்லது கண்டுபிடிக்கப் பயன்படுகிறது, இது எந்த நிறுவன சிம் அட்டையை மொபைல் சாதனத்தில் இட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாது IMEI இலக்கத்தின் மூலம் அந்த மொபைல் சாதனம் இருக்குமிடத்தைக் கண்டறியலாம்.  . உதாரணமாக, உங்கள் தொலைபேசி திருடப்பட்டாலோ, சிம் கார்டு மாற்றப்பட்டாலோ, உங்கள் மொபைல் வழங்குநர் இன்னமும் திருடப்பட்ட தொலைபேசியை IMEI ஐ பயன்படுத்தி அணுகமுடியும்.
IMEI இலக்கம் மற்றும் தொடரிலக்கம் இடையேஎன்ன வேறுபாடு?
ஒரு IMEI இலக்கமானது ஒருதொடர் இலக்கம் (Serial Number) போன்றதுதான். அது வன்பொருள் சாதனத்துக்கென வழங்கப்படும் ஒரு தனித்துவமான எண்ணாகும். மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர்களை மேற்பார்வை செய்யும் ஒரு சர்வதேச நிறுவனமான GSMA (GroupeSpéciale Mobile Association), எனும் சர்வதேச நிறுவனத்தால் இவை வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு மொபைல் தயாரிக்கும் நிறுவனத்திற்கும் IMEI இலக்கங்களை பல்வேறு இலக்க வீச்சுக்களில்  GSMA வழங்குகிறது
IMEI இலக்கம் போன்று மொபைல் சாதனத்தைத் தயாரிக்கும் நிறுவனமும் ஒருதொடர் இலக்கத்தை (Serial Number) அந்த மொபைல் சாதனத்தில் பத்தித்திருப்பதைக் காணலாம். மொபைல் தயாரிப்பாளர்களினால் வழங்கப்படும் தொடரிலக்கத்திற்கு எந்தவொரு ஒழுங்கு முறையையும் அவர்கள் பின்பற்ற முடியும்.
தொடரிலக்கத்திற்கான நீளம் அவை கொண்டிருக்கும் எண்கள் மற்றும் எழுத்துகளின் எண்ணிக்கை உள்ளிட்ட தொடர் எண்களுக்காக தங்கள் சொந்த நடைமுறையை தேர்வு செய்யலாம்.எனினும்IMEI எண்கள் எப்போதும் 15 இலக்கங்கள் கொண்டதாக இருக்கும்,
IMEISV (IMEIS  software version- மென்பொருள் பதி ப்புஎன IMEI இன் மற்றுமொரு பதிப்பும் உண்டு. ,சாதனத்தின் நிறுவப்பட்டுள்ள மென்பொருளின் பதிப்பின் 14 இலக்க எண்ணையும் மேலும் இரண்டு இலக்கங்களையும் கொண்டுள்ளது. சாதனத்தின் மென்பொருள் மேம்பாட்டிற்குப் பிறகு IMEISV மாற்றமுறும்.
அண்ட்ராயிட் ஸ்மாட் போன்களில் IMEI இலக்கத்தை Settings  ஊடாக  About Phone பகுதியில் சென்று பார்வையிட முடியும். மொபைல்போன் விசைப்பலகையில்  #*06# ஐ என டைப்செய்தும் IMEI இலக்கத்தைப்பார்வையிடலாம்

இனி Google Assistant இல் தமிழிலும் பேசலாம்.

அண்ட்ராயிட் கருவிகளில் கிடைக்கும்  Google Assistant எனும் கூகல் உதவியாளர் வசதியானது  இது வரைகாலமும் ஆங்கிலம் மற்றும் ஒரு சில ஐரோப்பியமொழிகளுக்கே ஆதரவு வழங்கியது. இனிமேல் தமிழிலும் கூகுல் உதவியாளரோடு நீங்கள் பேசலாம்,உதவிகள் கேட்கலாம் . உத்தரவிடலாம் கதைசொல்ல வைக்கலாம்.
கடந்த வாரம் தமிழ் மற்றும் ஒரு சில இந்தியமொழிகளுக்கும் கூகுல் அஸ்ஸிஸ்டண்ட்  வசதியை கூகுல் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எனினும் இந்தவசதி இன்னும்  சோதனைக்  கட்டத்திலேயே  (பீட்டாபதிப்பு) இருப்பதால் கூகுல் இது வரை உத்தியோகபூர்வமாக இதனை வெளியிடவில்லை. சோதனைக் கட்டத்தில் இருந்தாலும் விருப்பமுள்ளவர்கள் இதனைப் செயற்படுத்திப் பார்க்கமுடியும்.

பாதுகாப்பான Android மொபைல் பயன்பாட்டிற்கு..

மொபைல் பாதுகாப்புமொபைல் பாதுகாப்புஎன்பது இப்போதுபெரியபிரச்சினையாகமாறியிருக்கிறது.  மொபைலுடனேயேவாழப் பழகியிருக்கும் நாம்  நிதித் தகவல்கள்,வங்கிக் கணக்குவிவரங்கள்,குடும்பபுகைப்படங்கள், இணையஉரையாடல்கள்,குரல் பதிவுகள் போன்றஏராளமானதனிப்பட்டவிடயங்களை ”பாதுகாப்பான இடம்” எனநினைத்துக் கொண்டுமொபைலிலேயேபாதுகாத்துவைத்திருக்கிறோம். ஆனால் மொபைலில் இருக்கும் அத் தகவல்கள் எப்போதும் ”பாதுகாப்பாகவே இருக்கும்” என்பதைஎவராலும் உத்தரவாதம் அளிக்கமுடியாது.
உங்கள் மொபைல் தொலைந்துபோகலாம். திருடப்படலாம். அதேபோன்றுமொபைலைத் தொலைக்காமலேதிருடரிடம் பறிகொடுக்காமலே கூட உங்கள் அந்தரங்கதகவல்களைஉங்களைஅறியாமலேயேபிறர்கையில் செல்லவாய்ப்பிருக்கிறது.
அப்படியானால் அத்தகவல்களைமொபைலில்  எவ்வாறுதான் பாதுகாப்பது? எனநீங்கள் கேட்கலாம். அதற்கும் வழியிருக்கிறது. கீழேசொல்லப்படும் வழி முறைகளைப் பின் பற்றினால் ஓரளவுஉங்கள் அண்டட்ராயிட் ஃபோனையும் அதிலுள்ளதகவல்களையும்  பாதுகாக்கமுடியும். (மொபைல் கருவிகளிலும்  ஐ.ஓ.எஸ் இயங்குதளம் கொண்டஐ-போன்கள்  அதிகபாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால் அண்ட்ராயிட் இயங்குதளம் கொண்டகருவிகள் அதற்குநேர்மாறானவை)
இரு படிநிலைஅங்கீகாரத்தை (Two-Factor Authentication)) செயற்படுத்துங்கள் 
பாதுகாப்பான Android ஃபோன் ஒருபாதுகாப்பான Google கணக்கில் தொடங்குகிறது. கூகுல் கணக்கில் 2FA அங்கீகாரத்தைசெயற்படுத்துவதனால் ஒவ்வொருமுறையும் கூகுல் கணக்கில் நுளையும் போதுஉங்கள் கடவுச் சொல்லைவழங்கவேண்டியதோடுஅந்தநேரத்தில் கூகுலால் உங்கள் மொபைலுக்குஅனுப்பப்பட்டும் ரகசிய இலக்கத்தையும் உள்ளீடுசெய்யவேண்டும். அந்த இலக்கத்தைசரிபார்த்தபிறகேஉங்கள் கணக்கில் உள்ளேசெல்ல கூகுல்  அனுமதிக்கும்.  .
https://www.google.com/landing/2step/ எனும் இணைப்பில் சென்று இதனைச் செயற் படுத்தமுடியும்.  மேலும்,நீங்கள் உங்கள் Google கணக்குஅமைவுகளைப் பார்வையிடும் போது,​​உங்கள் கூகுல் கணக்குமீட்புதொலைபேசி (recover mobile no) எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிபோன்றவற்றையும் அவ்வப்போதுசரிபார்த்துக் கொள்ளுங்கள்.  தேவைப்படின் அவற்றைமாற்றியமையுங்கள்.  அத்துடன்  சமீபத்தியபாதுகாப்புநிகழ்வுகளையும் ((recent security events) சரிபாருங்கள்.  சந்தேகத்திற்கிடமானபிறசாதனங்கள் மூலம் உங்கள் கணக்கிற்குள்நுழைந்துள்ளதாகக்  கண்டறிந்தால் அவற்றைநீக்கிவிடுங்கள்.
பாதுகாப்பான திரைப்பூட்டு (Lock Screen) பயன்படுத்துங்கள்
ஒருபாதுகாப்பானதிரைப் பூட்டை   இதுவரைபயன்படுத்தாதிருந்தால்,அதை  இப்போதேஅமைத்துக் கொள்ளுங்கள்.
அண்ட்ராய்டின் பல்வேறுபதிப்புகளுக்கும் இடையில் செயல்முறைசற்றுவேறுபாடுகள் இருந்தாலும் பொதுவாக Settings > Security > Screen Lock பகுதியின் கீழ் இந்தவசதிகிடைக்கும்.
உங்கள் ஃபோனில்  விரல் அடையாள்  பாதுகாப்பு  ஸ்கேனர்வசதியிருப்பின்  உங்கள் கைவிரலடையாளத்தையும் சேர்க்கமறக்காதீர்கள்.
Find My Phone தெரிவை செயற்படுத்துங்கள்.
உங்கள் தொலைபேசியைதொலைத்துவிட்டாலோஅல்லதுதிருடரிடம் பறிகொடுத்துவிட்டாலோதொலைபேசியைகண்காணிக்கவும்   மீட்கவும்  அதிர்ஷ்டவசமாக Google வசதிசெய்கிறது.   சிலவேலைஅதைதிரும்பபெறவாய்ப்பு இல்லைஎன்றால் தொலைந்துபோனதொலைபேசியில் உள்ளதகவல்கள்  பிறர்கையில் கிடைத்துவிடாமல்   தொலைவிலிருந்தேஅழித்துவிடவும் முடியும்..
இதற்கு Find My Phone  (என் ஃபோனைக் கண்டுபிடி)  வசதியை இயல்புநிலையில் ழnசெய்துவைத்திருக்கவேண்டும். அனைத்துநவீனயுனெசழனைதொலைபேசிகளிலும் இயல்புநிலையில் இது வைக்கப்டுகிறது. உங்கள் ஃபோனில் இதனை Settings>Google > Security > Find My Phone சென்றுஉறுதிசெய்துகொள்ளுங்கள்.
உங்கள் தொலைபேசியைதொலைத்துவிட்டால் அல்லதுதிருடப்பட்டால்,உடனே; அருகிலுல்ளகணினியைப் பயன் படுத்தி https://www.google.com/android/find?u=0″எனும் இணைப்பில்  சென்றுதேடுங்கள்.
” Unknown Sources “மற்றும் ” Developer Mode  முறையை முடக்குங்கள்
கடந்தகாலத்தில் உங்கள் தொலைபேசியில் நீங்கள் ” Unknown Sources” எனபதை இயக்கியிருக்கலாம். இந்தஅமைப்பானது Google Play Store இல் இல்லாமல் வேறு இடங்களிலிருந்துசெயலிகளைநிறுவஉங்களைஅனுமதிக்கிறது-  இதனைஎப்போதும் இயக்கநிலையில்   வைத்திருப்பதுஆபத்தானது. உங்களின் மொபைலின் பாதுகாப்புஅதிகரிக்க,நீங்கள் இந்தஅம்சத்தைமுடக்கவேண்டும்.  இதனைநீங்கள் Settings > Security > Unknown Sources  எனுமிடத்தில் மாற்றியமைக்கலாம். .
அதேபோல்,டெவலப்பர்மோட்  ((Developer mode) என்பதையும் எப்போதும்   Off நிலைக்குமாற்றிவிடுங்கள்.  அதனை Settings> Developer Option இல் காணலாம்.
ஃபோனைபாதுகாப்பாகவைத்திருக்கும் பொறுப்பைஉங்களிடம் மட்டும் விட்டுவிட்டு கூகுல் ஓரமாகநின்றுவேடிக்கைபார்க்கவில்லை. கூகிள் ஏற்கனவேஉங்கள் தொலைபேசிபாதுகாப்பாக  இருப்பதைஉறுதிசெய்வதற்குபலவழிகளில் முயல்கிறது.
Google Play Protect
அண்ட்ராயிடின் புதியபதிப்புகளில் Google Play Protect  எனும் பாதுகாப்புஅம்சம் சேர்க்கப்படிருக்கிறது. இது   Play Store இல் உள்ளசெயலிகளையும் Unknown Sources   மூலம் உங்கள் சாதனத்திலும் நிறுவப்பட்டிருக்கும் செயலிகளையும் கண்காணிக்கிறது. தீங்கிழைக்கும் செயலிகளைஅவ்வப்போதுகண்டறிந்துநீக்குவதற்கு இது உதவுகிறது.
அண்ட்ராயிட் கருவியில் Settings > Google > Security > Play Protect மூலம் இதனை அணுகலாம்.
மறைக்குறியாக்கம்  (Encryption)
ஆண்ட்ராய்டின் ஆரம்ப நாட்களில், மறைக்குறியாக்க (Encryption)  வசதி இருக்கவில்லை. தற்போது அனைத்து நவீன அண்ட்ராயிட்  சாதனங்களிலும் இயல்பு நிலையாக மறைக்குறியாக்கம் செய்யப்படுகிறது. அதனைப்  பயனரால்  மாற்றியமைக்கமுடியாது.
அதாவது, உங்கள் தொலைபேசியில் உள்ள அனைத்து முக்கியமான தகவல்கள்,வேறு எவராலும் படிக்க முடியாதபடி மறைகுறியாக்கம்  செய்யப்பட்டு சேமிக்கப்படும்,உங்கள் கடவுச்சொல், PIN அல்லதுகடவுக்குறியீட்டைஉள்ளிடும் வரை டிக்ரிப்ட்  (decrypt) செய்யப்படமாட்டாது.
உங்கள்  ஃபோனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது கடினம் அல்ல-ஒருசிலஅமைவுகளைச் (setting) சரிபார்த்து, செயல்படுத்த சிலநிமிடங்கள் எடுத்துக்கொள்ளுங்கள், உங்கள் தொலைபேசி எப்போதாவது தொலைந்து போனாலோ திருடப்பட்டாலோ உங்கள்  தகவல்கள்  பாதுகாப்பாக இருக்கும்  என்ற மன நிம்மதியோடாவது  இருக்கலாம்.

Whatsapp introduces new Storage Management Tool

  Whatsapp introduces new Storage Management Tool : வாட்சப் தனது பயனர்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சேமிப்பிட மேலாண்மை கருவியை Storage ...